கே.ஜி.எஃப் 2 படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
Wed, 1 Jun 2022

நடிகர் யஷ் நடிக்க, ஸ்ரீநிதி செட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் கே.ஜி.எஃப் 2. மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரசாந்த் நில் இயக்கத்தில், வெளிவந்த இப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் 1,235 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், வருகிற ஜூன் 3ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Join Rocky on his journey to rule the world!! 🔥#KGF2onPrime, streaming from June 3 pic.twitter.com/m2dAaqxomE
— amazon prime video IN (@PrimeVideoIN) May 31, 2022