கைதி ஹிந்தி ரீமேக்கின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட்டான கைதி தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.இந்த ரீமேக்கில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கைதியின் இந்தி ரீமேக்கிற்கு போலா (Bholaa)என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 30, 2023 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், அஜய் தேவ்கன் தனது அடுத்த பெரிய படமான ரன்வே 34 இன் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார், இது ஏப்ரல் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள ரன்வே 34 படத்தை அஜய் தேவ்கன் இயக்கியுள்ளார்.
Proudly announcing my next venture Bholaa, releasing on March 30th, 2023.@ADFFilms @TSeries @RelianceEnt @DreamWarriorpic #DharmendraSharma #Tabu pic.twitter.com/pcghLwHwdm
— Ajay Devgn (@ajaydevgn) April 19, 2022