ஒரு வருஷம் ஆய்டிச்சி யாஷிகா..!!

 
1

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், துருவங்கள் பதினாறு, ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த யாஷிகாவின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் விபத்துக்குள்ளானது.இந்த  மோசமான கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவருடன் பயணம் செய்த அவரது தோழி வந்தி ரெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1

இந்தச் சம்பவத்தில் வந்திரெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். யாஷிகாவுக்கு கால் முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது. இவர்களோடு காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.பின் யாஷிகா தன் உடல் நலம் குறித்து அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். மேலும், யாஷிகா ஆனந்த் வீடு திரும்பி இருந்தார். உடல் குணம் வீடு யாஷிகா ஆனந்த் முதன் முதலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு வந்தார்.

கிட்டத்தட்ட இந்த கோர சம்பவம் நடந்து 1 வருடம் கடந்து விட்டது. இதுதொடர்பாக யாஷிகா ஆனந்த் பகிர்ந்துள்ள பதிவில், எங்களின் முழுமையற்ற கதை மீண்டும் சந்திக்கும் வரை மிஸ் யூ பூ. எப்போதும் என் பிரார்த்தனைகளிலும் , எண்ணங்களிலும் , நினைவுகளிலும் நீ தான் என கூறி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
 

From Around the web