தளபதி விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு..!!
Tue, 2 Aug 2022

கடந்த 2011ம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் திரைபடத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததை அடுத்து விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான விசாரணையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஜப்தி செய்ய சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்காததால் காவல்துறை உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.