கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்த பிரதமர் மோடி!
Thu, 23 Jun 2022

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்த நிலையில், அவரது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பிரேமலாதா விஜயகாந்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.