நடிகர் விஷாலின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதில்..!!

இந்துக்களின் புனித தளங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் ரூ.800 கோடி செலவில் புனரமைக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி சாமி தரிசனம் செய்ய கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் பாதை வரை சுமார் 320 கிலோமீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் எவ்வித கூட்ட நெரிசலும் இன்றி, பக்தர்கள் எளிதாக சென்று வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆன்மீக அருங்காட்சியகம், நூலகம் மற்றும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கான மையங்கள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனது நண்பரான நடிகர் நந்தா உள்ளிட்டோருடன் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற நடிகர் விஷால் இதையெல்லாம் கண்கூடாக பார்த்துவிட்டு, பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்கு சென்று அற்புதமான தரிசனம் செய்தேன். கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாக மாற்றி உள்ளீர்கள். அனைவரும் தரிசிக்க கூடிய வகையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.” என தெரிவித்திருந்தார்.
மோடியை டேக் செய்து இவர் போட்டிருந்த பதிவை கண்ட பிரதமர் மோடி, நடிகர் விஷாலுக்கு பதில் அளித்துள்ளார். மோடி தனது பதிலில், காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
Glad that you had a wonderful experience in Kashi. https://t.co/e74hLfeMj1
— Narendra Modi (@narendramodi) November 2, 2022