விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு தாவும் பாக்கியலட்சுமி நடிகை ?

 
1

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதில் சூரியுடன் இணைந்து புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பிறகு விமலின் விலங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் சீரியலில் ரேஷ்மா பசுபுலேட்டி என்ட்ரி கொடுத்தார்.  வம்சம், வாணி ராணி, மரகத வீணை, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ஜீ தமிழில் புதியதாக ஒளிப்பரப்பாக இருக்கும் சீரியலில் ரேஷ்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்த வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அதனால் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web