பாக்கியலட்சுமி வீட்டிலிருந்து அடுத்து வெளியேறபோவது இனியாவா..?

 
1

விஜய் டிவி-யில் தற்போது இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல்  பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர்.  இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற குடும்பத்தலைவி கேரக்டரில் நடித்து வரும் சுசித்ரா ஷெட்டி, இல்லத்தரசிகளின் பேரன்பை பெற்றுள்ளார்.   

பாக்கியலட்சுமியின் கணவர் கோபி கேரக்ட்ரில் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார். அப்பாவியான தனது மனைவியை ஏமாற்றும் கணவரின் கதைதான் இந்த சீரியல். குறிப்பாக கோபியின் நடிப்பு அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பாக்கியா, கோபி, ராதிகா டிராக் ஒரு புறம் செல்ல, மற்றொரு புறம் ரித்விகா, எழில், வர்ஷினி டிராக் செல்கிறது.

 இந்த சமயத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் பாக்கியா வீட்டில் நடக்க இருக்கிறது. அதாவது வகுப்பில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் இனியாவை கண்டித்த ஆசிரியர், பெற்றோரை அழைத்து வரும்படி கூறுகிறார். ஆனால் பயத்தில் இதை வீட்டிலிருந்து மறைக்கிறார் இனியா.  

பள்ளியில் என்ன செய்வது என தவிக்கும் இனியா தன் அப்பாவான கோபிக்கு போன் செய்கிறார்.இதை அறிந்த பாட்டி, பாக்யா எல்லோரும் இனியவை கண்டிக்கின்றனர். பாக்யா கை நீட்டி அறைகிறாள். 

உனக்கு அப்பா தான் வேணும்னா நீ கோபி கூடவே போ என சொல்கிறார் பாட்டி. உடனே கோபி வந்து தன் செல்ல மகளான இனியாவை கூட்டி செல்வது போல் முடிகிறது இந்த ப்ரோமோ  

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இனியா தன் அப்பா கூட செல்கிறாளா இல்லையா என்று... 

     

From Around the web