புதிய கார் வாங்கியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!! 

 
1

கார் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு என்றும் அது தனக்கும் இருந்தது என்றும் இன்று அந்த கனவு நிறைவேறி உள்ளதாகவும் நடிகை ரித்திகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக நாம் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்றும் கடவுள் அருளும் கடும் உழைப்பும் இருந்தால் நாம் நினைத்தது நிறைவேறும் என்றும் ரித்திகா பதிவு செய்துள்ளார். புதிய கார் வாங்கிய ரித்திகாவுக்கு கனி உள்பட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளுள் ஒன்றான 'குக் வித் கோமாளி' மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா தமிழ்செல்வி. இவர் முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரின் மூலம் அறிமுகமானார்,தற்போது ரித்திகா விஜய் டிவியில் 'பாக்யலக்ஷ்மி' தொடரில் நடித்து வருகிறார்.

From Around the web