மருத்துமனையில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட வீடியோ!

 
1

விஜய் டிவியில் பிரபலமாய் போய்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலுக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார்.

மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஹேமா ராஜ்குமார் தனது 22 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினர்.இவர் பெப்பர்ஸ் டியிவில் ஆங்கர் பணிசெய்தார். 2015 தாம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற தமிழ் திரைபடத்தில் ஹேமா ராஜ்குமார் அறிமுகமானார்.“ஆறாது சினம்” என்ற தமிழ் படத்தில் சிறந்த நடிகர்களான அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா போன்ற நடிகர்களுடன் விமலா என்ற வேடத்தில் ஹேமா ராஜ்குமார் நடித்தார்.

1

சீரியல் மட்டுமல்லாது யூடியூப் பக்கம்மொன்றை தொடங்கி தன்னுடைய அன்றாட நிகழ்வுகளையும் அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போதும் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், “ எனக்கு இடது மார்பகத்தில் ஒரு கட்டி ஒன்று இருந்தது. நான் அது கேன்சராக இருக்குமோ என்று பயந்தேன். மருத்துவரிடம் சென்று சோதனை செய்த போது இது எல்லா பெண்களுக்கும் இயல்பாக வரக்கூடியதுதான். அறுவை சிகிச்சை செய்து விடலாம் என்று சொல்ல, நானும் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

இதையடுத்து மாதந்தோறும் பரிசோதனை மேற்கொண்டு வந்தேன். ஆனால் கடந்த சில மாதங்களாக பணியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் திடீரென மார்பகத்தில் வலி ஏற்பட்டது. இது எனக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் அது வெறும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் வலி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு நிம்மதி பெருமூச்சி விட்டேன். பொதுவாக பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெண்களின் விழிப்புணர்வுக்காக இந்த வீடியோவை நான் வெளியிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 


 

From Around the web