அமேசான் பிரைமில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல் - பார்த்திபன் வருத்தம்..!!

 
1

வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் பார்த்திபன். அந்த வகையில் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ‘இரவின் நிழல்’. 

கடந்த ஜூலை 15ம் தேதி தியேட்டரில் வெளியான இப்படம் எப்போ ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வந்த நிலையில் யாரும் அறியாத வண்ணம் இந்த படத்தின் வெளீயீடு நேற்று நடந்துள்ளது. இது மக்களுக்கு என நினைத்தால் இயக்குனர் பார்த்தினனும் ஷாக் ஆகியுள்ளார் என்பது தான் தற்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

1

ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பார்த்திபனை பாராட்டி வருகின்றனர்.  

இந்நிலையில், பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான நிலையில்,  இயக்குனர் பார்த்திபன் எழுதிய ட்வீட் வைரலாகி உள்ளது 

‘மகிழ்ச்சியை கூட… அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்! Please நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள் single shot படத்திற்கு ஆதரவை தர வேண்டுகிறேன்! நன்றியுடன் – பார்த்திபன்’ என ட்வீட் போட்டுள்ளார்.

எப்படி ஒரு இயக்குநருக்கே தெரியாமல் ரிலீஸ் செய்கின்றனர் என்பது போல மக்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 

From Around the web