மதுரை மக்களே ரெடியா..!!நாளை மதுரைக்கு வரும் விருமான் படக்குழுவினர்!
Aug 2, 2022, 06:35 IST

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'விருமன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் நாளை ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குனர் பாரதிராஜா, ஷங்கர், சூர்யா, கார்த்தி, சூரி, அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில், ஒரு பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.