ஹீரோ சம்பளத்தை விட வில்லனுக்காக 2 மடங்கு சம்பளம் வாங்கும் மக்கள் செல்வன்..!!
Jul 19, 2022, 13:34 IST
’புஷ்பா 2’ வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 35 கோடி என்றும் கூறப்படுகிறது. ஹீரோவாக நடிக்க வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு சம்பளம் வில்லனாக நடிக்க வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது திரை உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ விஜய் நடித்த ’மாஸ்டர்’ ஆகிய திரைப்படங்கள் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த முக்கிய திரைப்படங்கள் என்பதும் இவை மூன்றுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 - cini express.jpg)