பிரபல காமெடி நடிகர் போண்டாமணிக்கு உதவிய மக்கள் செல்வன்..!! 

 
1

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் போண்டா மணி. இவர் வடிவேலுமற்றும் விவேக் உடன் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். இதுவரை 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் போண்டா மணிக்கு இரண்டு கிட்னி செயலிழந்துவிட்டதாகவும்,  சென்னை ஓமந்தூரர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் , அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும்  நடிகரும்,  போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க அண்மையில் வீடியோ ஒன்றை  வெளியிட்டு கோரிக்கை வைத்தார். இதனையடுத்து  நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், நடிகர் போண்டாமணியை நேரில்  சந்தித்து நலம் விசாரித்தார்.  மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.அதன்பிறகு  தொடர்ந்து நடிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் பலர் அவரை சந்தித்து, உதவிகளைச் செய்து வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.  

1

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, போண்டாமணியின் மருத்துவ உதவிக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இது குறித்து போண்டாமணி கூறியதாவது, " கேட்டவுடனே நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பணத்தை வங்கி எண்ணிற்கு போட்டுவிட்டார் அவர் கொடுத்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம்" என்று கூறியுள்ளார்.

மேலும் திருச்செந்தூர் கோவிலில் நேற்று நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலுவிடம், போண்டாமணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு, என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்வேன் என்று கூறினார். 

vadivelu

பின்னர் பேசிய அவர், தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2, விஜய் சேதுபதியுடன் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கைவிடப்பட்டதாக என்ற கேள்விக்கு, அதெல்லாம் இல்லை. படத்தின் பணிகள் நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் நமக்கு தேவையில்லை. சினிமாவில் இருந்துக்கொண்டே மக்களுக்கு நன்மை செய்வோம். தமிழக அரசின் ஆட்சி நன்றாக இருக்கிறது என்று கூறினார். 

From Around the web