தயவு செய்து பிராத்தனை செய்யுங்கள்: சின்னத்திரை நடிகையின் வைரல் வீடியோ..!!
Apr 21, 2022, 08:05 IST

நடிகை ப்ரீத்தா தமிழில் பல சூப்பர் ஹிட் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றி, ‘ஜோடி நம்பர் ஒன்’ மற்றும் ‘மானாட மயிலாட’ ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் தனது நடன திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமானவர். அவரது கணவர் ராகவ் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள பன்முக ஆளுமை மற்றும் இசையமைப்பாளர், தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் எனப் புகழ் பெற்றவர்.
ப்ரீத்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தன் தாய் தவறுதலாக கீழே விழுந்து மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தன்னால் பேச முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.