தயவு செய்து கட்டுக்கதையை நிறுத்துங்க - நடிகை ஸ்ருதிஹாசன் ஆவேசம்..!! 

 
1
கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன். 

இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து 2011-ல் வெளியான ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார்.

Shurtihasan

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சுருதி ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், தான் கடுமையான பிசிஓஎஸ் பிரச்சினைகளையும் வளர்சிதை மாற்றங்களையும் சந்தித்து வருவதாகவும், ஆனால் அந்த சவால்களை ஏற்றுக்கொண்டு முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, சரியான நேரத்திற்கு தூக்கம் என தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஆனால், இதை சில ஊடகங்கள் திரித்து செய்திகளாக வெளியிட அது குறித்து அவர் தற்போது விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இப்பொழுது நான் ஐதராபாத்தில் மகிழ்ச்சியாக படப்பிடிப்பில் இருக்கிறேன். பல பெண்களைபோல நானும் பிசிஓஎஸ்ஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என நான் என் உடற்பயிற்சி வீடியோவை முன்பு பகிர்ந்திருந்தேன். இது சவாலானது தான். ஆனால், இதனால் நான் பாதிக்கப்பட்டு உடல்நல குறைவாக இருக்கிறேன் என்பது அர்த்தமல்ல. சில ஊடகங்கள் என்னுடைய பதிவை சரியாக படிக்காமல் நான் நலமில்லை எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் எனவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. அது முற்றிலும் பொய். அந்த பதிவு உடலில் பிரச்சினைகள் இருந்தாலும் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டிருந்தேன். ஒரு வருடத்திற்கும் மேலாக பிசிஓஎஸ் பிரச்சினை இருக்கிறது. ஆனாலும் நான் நலமாகவே உள்ளேன். உங்கள் அக்கறைக்கு நன்றி!’ என தெரிவித்துள்ளார்.


 

From Around the web