பிரபல நடிகர் மீது போலீசில் புகார்..!!

 
1

நடிகர் ரன்வீர் சிங் பாலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக எப்போதும் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பவர். திரைப்படம் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்தியானா பல்கலை கழகத்தில் பட்டம் பெற்ற ரன்வீர்சிங்கின் திரையுலகக் காதல் சிறு வயது முதலே மேடை நாடகம், பள்ளி விழாக்கள் உள்ளிட்டவற்றில் இருந்து ஆரம்பித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘பேண்ட் சர்மா பாராத்’ என்ற படத்தில் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஜோடி போட்டு நடித்து முதன் முதலாக அறிமுகமானார். பெரிய அளவு ஹிட் கொடுத்த இந்த படத்தின் மூலம் இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்தார். தனது அறிமுகப் படத்திலேயே ரன்வீர்சிங்குக்கு அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. ரன்வீர் சிங்& நடிகை தீபிகா படுகோன் காதல் கடந்த 2018-ம் ஆண்டு திருமணத்தில் கைகூடியது.

Deepika-Ranveer

வித்தியாசமான உடை அமைப்பை விரும்பும் ரன்வீர் சிங் அதற்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்திலும் அக்கறை செலுத்துபவர். இவரை பின் தொடரும் இளைஞர் பட்டாளம் ஏராளம்.பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக வலம் வரும் ரன்வீர் இந்த முறை நிர்வாண மற்றும் அரை நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து அவற்றை வைரலாக்கி உள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள நடிகர் ரன்வீர் சிங், "நான் உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது என்பது எளிதானது. என்னுடைய ஆன்மா நிர்வாணமானது தான். எல்லாருடையதும் அப்படிதான் இருக்கும் என்பது உண்மை. நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக இருக்க தயக்க மாட்டேன். ஆனால் எனக்கு முன்னால் இருப்பவர்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்பது தான் உண்மை" என்றார்.

இந்தநிலையில் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை கிழக்கு புறநகரில் உள்ள செம்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Ranveer

அந்த புகாரில், "நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். அவர்களின் கண்ணியத்தை அவமதித்துள்ளார். எனவே அவர் மீது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என கூறப்பட்டு உள்ளது. இந்த புகார் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை, விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாலிவுட் நடிகர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், ரன்வீர் சிங் நிர்வாண புகைப்பட சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web