கோடை விடுமுறையில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் 2.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!! 

 
1

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 2023-ம் கோடை விடுமுறையில் 'பொன்னியின் செல்வன்-2' ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' குறித்து இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

1
இந்த நிலையில் படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை படக்குழு வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர், அதாவது படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


 


 

From Around the web