பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு இந்த தேதியில் வெளியாகும்..!! 

 
1

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் கடந்த 30-ம் தேதி வெளியாக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படம் இதுவரைக்கும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் சாதனை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவாகும்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குவினர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட படக்குழு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

1

நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் மற்றும் சுபாஷ்கரன் இயக்குநர் மணிரத்னம் இருவரும் இணைந்து கல்வி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியை கல்கி அவர்களின் மகன் கல்கி ராஜேந்திரனிடம் வழங்கினர்.

From Around the web