பொன்னியின் செல்வன் படத்தில் வெளியான பர்ஸ்ட் ப்ரோமோ…!!
Sep 23, 2022, 07:25 IST

மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படம் வருகின்ற செப்டம்பர் 30 அன்று திரைக்கு வர உள்ளது. சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளனர். அனைத்து மொழிகளிலும் படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பாளர்கள் நாட்டின் பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டு உள்ளனர். அதில் ஆதித்த கரிகாலனால் வாதம் செய்யப்பட்ட வீரபாண்டியனை கொலை செய்தவர்களை பழிதீர்க்க ரவிதாசன் எப்படி சோழநாட்டிற்குள் நுழைகிறாள் என்பதை நடிகர் கமல் அவரது கம்பீர குரலில் சொல்லி நம்மை 1000 வருடங்கள் பின்னோக்கி எடுத்து செல்கின்றார்.இதோ அந்த ப்ரோமோ வீடியோ …