திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் விரைவில் ஒடிடியில்..? 

 
1

இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வம் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில்  நடிகர்கள் கார்த்தி ,விக்ரம் ,ஜெயம் ரவி ,ஜெயராம் ,பார்த்திபன், சரத்குமார் ,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி என ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். அத்துடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. 

இந்நிலையில், அடுத்த மாதம் பொன்னியின் செல்வன் திரைப்பட ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் பொன்னியின் செல்வன் படம் ஓ.டி.டி.யில் ரூ.125 கோடிக்கு விலைபோய் உள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) பொன்னியின் செல்வன் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தேதியை விரைவில் வெளியிட உள்ளனர். 

From Around the web