பிரபல கோயிலில் சிறப்புப்பூஜை நடத்திய பூஜா ஹெக்டே !

 
1

தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.கடந்தாண்டு வெளியான விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தெலுங்கில் பிரபாஸுக்கு அவர் ஜோடியாக நடித்த 'ராதே ஷ்யாம்' திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் இணைந்து நடித்த 'ஆச்சார்யா' ‌‌‌படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வெளியான இந்த இரண்டு திரைப்படங்களும் தோல்வியையும் சந்தித்தது. 

தெலுங்கில் தொடர் தோல்வியால் இந்தியில் ரன்வீர் கபூடன்  இணைந்து 'சர்க்கஸ்' படத்தில் நடித்தார். இந்த படமும் போதிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தனது திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். இதில் திரைப்படங்கள் வெற்றி பெற சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்தியதாக சொல்லப்படுகிறது. 

From Around the web