பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் திருமணத்தில் அடிதடி..!! 

 
1

உலகமெங்கும் ரசிகர் பட்டாளத்தைக்கொண்டிருப்பவர் பிரபல ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். 40 வயதான இவர் பாடகி, பாடலாசிரியர், நடன கலைஞர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார். பாப் இளவரசி என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறார்.

britney spears 3rd marriage

இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ள நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காாியை (28) 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற விழாவில் உலகின் முன்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் முன்னாள் கணவா் ஜேசன் அத்துமீறி நுழைந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளார். அதை அவரது இன்ஸ்டாகிராமில் வைவ் செய்தாா். அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து நிறுத்தினா்.


மேலும் இந்த திருமணத்திற்கு பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை அழைத்ததாக அவா் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து அவரை போலீசாா் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

கடந்த 2004-ல் லாஸ் வேகாஸில் தனது குழந்தை பருவ நண்பரான ஜேசன் அலெக்சாண்டரை மணந்தார், ஆனால் அவருடனான திருமணம் விரைவில் விவாகரத்தில் முடிந்தது. அதே ஆண்டில், நடனக் கலைஞர் கெவின் ஃபெடர்லியை மணந்தார். இந்த திருமண வாழ்க்கை 2007-ல் முடிவுக்கு வந்தது. கெவினை 2007-ல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web