பிரபல பிளாக்பஸ்டர் திரைப்படம் விரைவில் ஓடிடியில்..!!
 

 
1

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’.இப்படத்தின் தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிறகு  இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'கோல்டு'. இந்த படத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் மலையாள முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ், பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் கோல்டு படத்தில் நடித்துள்ளனர். கோல்ட் படம் கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ராஜேஷ் முருகேசன்‌ இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி நெட்வொர்க்கின் சூர்யா & சன் டிவி தொலைக்காட்சி சேனல்கள் கைப்பற்றி உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அமேசான் ப்ரைம் இணையத்தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

From Around the web