பிரபல பாலிவுட் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி மாரடைப்பால் காலமானார்..!!

 
1

நாடகத்துறையில் இருந்து இந்தி சினிமாவில் நுழைந்தவர் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி. கடந்த 25 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர், கோய்.. மில் கயா, சத்யா, கடர்: ஏக் பிரேம் கதா, கிரிஷ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹ்ரித்திக் ரோஷன், சன்னி தியோல் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

actor-mithilesh-chaturvedi

மேலும் திரைப்பட வினியோகஸ்தராகவும் இருந்து பல்வேறு படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 1992-ம் ஆண்டு பட்டியாலா பேப்ஸ் மற்றும் ராம்ஜெத் மலானியாக தோன்றிய தொடர் உள்ளிட்ட சில வெப் தொடர்களில் நடித்தார். இவர் கடைசியாக நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து குலாபே சிடாபோ மற்றும் ஆயுஷ்மான் குரானா என்ற படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தனித்தன்மை வாய்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட மிதிலேஷ் சதுர்வேதி மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மிதிலேஷ் உயிரிழந்தார்.

RIP

மிதிலேஷின் மறைவை அவரது மருமகன் ஆஷிஷ் உருக்கமாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் இந்த உலகில் நீங்கள் ஒரு சிறந்த அப்பாவாக இருந்தீர்கள். என் மீது அன்பை பொழ்ந்தீர்கள். ஒரு மருமகனாக பார்க்காமல் ஒரு மகனாக என்னை பார்த்தீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

மிதிலேஷ் சதுர்வேதியின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், இன்று  அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

From Around the web