கிராமி விருது பெற்ற பிரபல பாடகி காலமானார்..!!
1948-ல், கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தவர் அனிதா பாயிண்டர். இவர், தனது தந்தையின் தேவாலயத்தில் தனது சகோதரிகளுடன் பாடி வளர்ந்தார். 1969-ல் அவரது இளைய சகோதரிகளான போனி, ஜூன் மற்றும் ரூத் ஆகியோருடன் சேர்ந்து ‘தி பாயிண்டர் சிஸ்டர்ஸ்’ என்ற பாப் பாடும் குழுவை உருவாக்கினார்.
இவர் 70 மற்றும் 80-களில் "ஃபயர்", "சே ஸோ", "ஹி இஸ் சோ ஷை", "ஸ்லோ ஹேண்ட்" மற்றும் "ஐ அம் சோ எக்சிட்டட்" என அவர்களின் இசைக்குழு உலகளாவிய மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் அறிக்கையின்படி, குழுவின் முதல் இசை ஆல்பம் ‘ஃபேரிடேல்’ பாடலுக்காக முதல் கிராமி விருதை வென்றது. அவர்களின் முழு வாழ்க்கையிலும், குழு மூன்று கிராமி விருதுகளை வென்றது மற்றும் சோல் ரயில் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 31-ம் தேதி கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மறைந்த அனிதாவுக்கு ரூத் என்ற சகோதரியும், ஆரோன் மற்றும் ஃபிரிட்ஸ் சகோதரர்களும் மற்றும் பேத்தி ராக்ஸி ஆகியோர் உள்ளனர்.
இவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனிதாவின் இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்பட்டாலும், அவர் இப்போது தனது மகள் ஜடா மற்றும் அவரது சகோதரிகள் ஜூன் மற்றும் போனியுடன் நிம்மதியாக இருக்கிறார் என்பதை அறிந்து ஆறுதல் அடைகிறோம். எங்கள் குடும்பத்தின் மீதான அவளுடைய அன்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும். இந்த துயரம் மற்றும் இழப்பு காலத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்கவும். அனிதாவுடன் சொர்க்கம் மிகவும் அன்பான அழகான இடமாகும்” என்று கூறியுள்ளனர்.