பிரபல திரைப்பட நடிகை மாரடைப்பால் காலமானார்..!!

 
1

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தவர் திலோத்தமா குந்தியா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒடியா தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.

1

இந்த நிலையில் திலோத்தமா குந்தியா கடந்த 5-ம் தேதி புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருடைய கணவர் ஹிமான்சு சமல். இவர்களுக்கு தேவிகா அருந்ததி சமல் மற்றும் அனுபூதி சமல் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

RIP

தேவிகா அருந்ததி ஒடியா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் முன்னணி நடிகையாக உள்ளார். அதே வேளையில், கணவர் ஹிமான்ஷு இயக்குநர், எழுத்தாளர் மற்றும் உரையாடல் எழுத்தாளர் ஆவார்.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ட்விட்டரில் அவரது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web