பிரபல பஞ்சாபி நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா காலமானார்!!

 
1

1970கள் மற்றும் 1980களில் பஞ்சாபி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தல்ஜீத் கவுர் கங்குரா. 1976-ம் ஆண்டு ‘தாஜ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கித்தா, புட் ஜட்டன் தே, ரூப் ஷாகினன் தா, இஷாக் நிமானா, லாஜோ, பட்வாரா, வைரீ ஜாட், படோலா, கீ பானு துனியா டா, சோஹ்னி மஹிவால், ஜக்கா டகு மற்றும் அனக் ஜட்டன் டீ போன்ற பல படங்கள் மூலம் பிரபலமானார்.

1

தல்ஜீத் கவுர் கங்குரா இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படித்தார் மற்றும், அவர் அந்த நிறுவனத்தில் இருந்த காலத்தில் இயக்குனர் விது வினோத் சோப்ராவுடன் சேர்ந்து பணியாற்றினார். இவர் 10 இந்தி உட்பட 70-க்கும் மேற்பட்ட பஞ்சாமி படங்களில் நடித்துள்ளார்.

தல்ஜீத் தனது கணவர் நடிகர் ஹர்மிந்தர் சிங் தியோல் சாலை விபத்தில் இறந்த பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 2001-ல் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

தல்ஜீத் மனநோய்க்காக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், பஞ்சாபின் லூதியானாவில் உள்ள கஸ்பா சுதார் பஜாரில் நேற்று காலமானார். அவரது திடீர் மரணத்தால் அவரது ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்ததோடு, குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்தனர்.

பஞ்சாபி நடிகை தல்ஜீத் கவுரின் இறுதிச் சடங்குகள் இன்று லூதியானாவில் நடைபெற்றது.

From Around the web