பிரபல தமிழ் டிக்டாக் பிரபலம் தற்கொலை..!!
Jan 27, 2023, 22:50 IST

டிக்டாக் மூலம் தமிழகமெங்கும் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். இவர் பேபி பார்க்கில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து இன்று மாலை தற்கொலை செய்துக்கொண்டார். இவர் துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் நடனமாடி உள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திலும் நடனமாடியுள்ளார்.
இந்தநிலையில் இன்று இவருக்கு பிறந்த நாள் என்பதும் இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.