பிரபல நடிகை மீரா மிதுன் விரைவில் கைது - போலீசார் அறிவிப்பு..!! 

 
1

தமிழ் சினிமாவில் பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். முன்னணி சினிமா பிரபலங்கள் பற்றி தவறான கருத்து பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார். அந்த வகையில் கடந்த ஆண்டு பட்டிலினத்தவர்கள் பற்றி பேசி பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டார். 

இந்த வழக்கில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மீரா மிதுனை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் மீரா மிதுன் ஆஜராகததால் ஜாமீனில் வெளிவராத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் பெங்களுரில் பதுங்கியிருப்பதாகவும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். அதனால் விரைவில் மீரா மிதுன் கைதாவது உறுதியாகியுள்ளது.  

From Around the web