பிரபல நடிகை உருக்கம்.. ரசிகர்கள் ஆறுதல்..!!

 
1

காதலர் தினம்' படத்தில் ரோஜாவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சோனாலி பிந்த்ரே.கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்த இவர், அண்மையில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று, தான் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் அந்த பதிவில், "4 ஆண்டுகளுக்குப் பிறகு.. இதே நாற்காலி, இதே பார்வை, இதே இடம்.. முழுமையான பயத்திலிருந்து தொடர்ந்த நம்பிக்கை வரை, பல மாறிவிட்டது, சில இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.. தான் இதே இடத்திற்கு மீண்டும் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை" என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். 

இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web