ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் நடிக்க  இருக்கும் பிரபல நடிகை..!!  

 
1

நடிகை அமலாவின் அழகும், நடன திறமையும் இவருக்கு 'மைதிலி என்னை காதலி' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இந்த படம் விமர்சனம் ரீதியாகவும், அமலாவுக்கு முதல் படத்திலேயே நல்ல நடிகை என்கிற பெயரை பெற்று தந்தது.இதை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமான அதே  வருடத்திலேயே...  மெல்ல திறந்த கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, உன்னை ஒன்று கேட்பேன், ஒரு இனிய உதயம்,  ஐந்து படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தார். 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1992 ஆம் ஆண்டு  பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். 

1

நடிப்பின் மீது இவருக்கு இருந்த தீராத ஆர்வம் தான் இவரை முன்னணி நடிகையாகவும் மாற்றியது என்றாலும், இவருடைய திறமையை  நிரூபிக்க வாய்ப்பு கொடுத்த நடிகர் டி.ராஜேந்தரை ஒரு போதும் மறக்க மாட்டேன் என பல பேட்டிகளில் மனமார அவருக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார் அமலா .

சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த அமலா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'கணம்' படத்தில் நடித்தார். தெலுங்கு நடிகர் சர்வானந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் அழுத்தமான நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

1

இந்நிலையில் புதிய தமிழ் சீரியல் ஒன்றில் அமலா நடிக்கவுள்ளார். ஜீ தமிழ் சீரியலில் 'உரிமை' என்ற தலைப்பில் உருவாகும் இந்த சீரியலில்  முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். முன்னணி நடிகை அமலா தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web