பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்..!!
 

 
1

பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. ஸ்டாண்ட் அப் காமெடியனாக வாழ்க்கையை தொடங்கிய அவர், பின்னர் இந்தி படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். பின்னர் பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். அதோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார். 

இந்நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web