‘ராங்கி’ சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்..!!

 
1
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களை இயக்கிய  எம்.சரவணன் இயக்கியுள்ள படம் ‘ ராங்கி’. படத்தின் கதையை ஏ ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார்.  இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி சத்யா இசையமைத்துள்ளார்.

த்ரிஷாவின் ஆக்க்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா 
தனது குடும்பத்தில் நடக்கும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது,  அது சர்வதேச பிரச்சினைக்கு இழுத்துச் செல்கிறது. அதை எப்படி முறியடிக்கிறார்  என்பதே படத்தின் கதைக்களம். படத்தில் மட்டும் சிக்கல் இல்லை, படமே சிக்கலில் சிக்கி தற்போதுதான் மீண்டுள்ளது. சமீபத்தில் கூட படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  நிலையில் தற்போது படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதாவது படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்  கைப்பற்றியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.


 

From Around the web