பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்..!!

 
1

மும்பையில் நாடகக் கலைஞராக கலை வாழ்க்கையை தொடங்கிய மன்தீப், 1980ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் நாகின் முதல் படமான மின்சினா ஓட்டா என்ற படத்தில் அறிமுகமானார். இவர் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மன்தீப் ராய் மக்கள் மனதை கவர்ந்தவர். இவர் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் நாகின் உதவியாளராகவும் இருந்து வந்தார்.

இவர் மின்சினா ஓட்டா, புஷ்பக், அபூர்வ சங்கமா, எலு சுட்டினா கோட்டே உள்ளிட்ட படங்களில் திறம்பட நடித்து ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றவர் மன்தீப் ராய். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உடல் நலம் பாதிப்பு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மன்தீப் ராய் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

From Around the web