பிரபல சீரியல் வில்லி அர்ச்சனா ‘ராஜா ராணி 2’ சீரியலிருந்து விலகல்... ? 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘ராஜா ராணி’. முதல் சீசனின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் சீசன் படுஜோராக சென்றுக் கொண்டிருக்கிறது. பல அதிரடி திருப்பங்களுடன் சென்றுக்கொண்டிருக்கும் இந்த சீரியலை இல்லத்தரசிகள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். 

இந்த சீரியலில் ‘திருமணம்’ சீரியல் நடிகர் சித்து ஹீரோவாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் அவர் விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதில் ரியா நடித்து வருகிறார்.  மாமியார், மருமகள்களுள் இடையே நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

archana

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா நடித்து வருகிறார். நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவரது நடிப்புக்காக தான் சீரியலை ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சீரியலில் இருந்து விஜே அர்ச்சனா திடீரென விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகை அர்ச்சனா குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web