பிரபல பாடகி சித்ரா சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட உருக்கமான பதிவு..!!
பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. இவர் பிரபல தொழிலதிபர் விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் நந்தனா. பாசத்தை ஊட்டி வளர்த்த இவர்களுக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டது.தன்னுடைய அன்பை கொட்டி சித்ரா இவரது மகளை வளர்த்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு, துபாயில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தன்னுடைய மகளையும் அழைத்து சென்றார் சித்ரா.அப்போது பலர் அந்த நிகழ்ச்சியை பார்த்தனர்.
துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்து தன்னுடைய மகளுடன் சித்ரா தங்கி இருந்த நிலையில் அந்த ஹோட்டலில் இருந்த நீச்சல் குளத்தில், எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தார் நந்தனா.
இதில் இருந்து சித்ரா அவர்கள் வெளியில் வரவே பல வருடங்கள் ஆனது நேற்று தன் மகளின் பிறந்தநாள் என ஒரு பதிவை போட்டுள்ளார்.மறைந்த அவருடைய மகளின் பிறந்தநாளில் மிகவும் உருக்கமாக போட்டுள்ள பதிவு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தன் குழந்தையின் இழப்பு என்பது எவ்வளவு பெரிய வலி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அப்படி ஒரு தேவதையை இழந்து தான் தவித்து வருகிறார்.
— K S Chithra (@KSChithra) December 18, 2022