பிரபல சின்னத்திரை நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை..!!

 
1

சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ என்ற தொடரில் சந்த் கவார் என்ற பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை துனிஷா சர்மா. அதனைத் தொடர்ந்து சக்கரவர்த்தி அசோகா சாம்ராட்டில் ராஜகுமாரி அஹங்காராவாக நடித்தார்.

2016-ல் அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான ‘ஃபிதூர்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இதில் இளம் வயது கத்ரீனா கைஃப்பாக நடித்தார். பின்னர் அதே ஆண்டில் வெளியான ‘பார் பார் தேகோ’ படத்திலும் இளம் வயது கத்ரீனா கைஃப்பாக நடித்தார். அதனைத் தொடர்ந்து ‘கஹானி 2: துர்கா ராணி சிங்’, ‘தபாங் 3’ படத்திலும் நடித்தார்.

tunisha sharma

இந்த நிலையில் இன்று அவர் சின்னத்திரை தொடர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். அப்போது துனிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் போடப்படும் வீடியோ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.



இந்நிலையில், திடீரென மேக்கப் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த துனிஷா சர்மாவை சக குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை மருத்துவர்கள் துனிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

From Around the web