தளபதி படம் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் செய்த பிரார்த்தனை..!!
Mon, 9 Jan 2023

இயக்குனர் வம்சி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி அவரது ரசிகர்கள் நூதன பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ரசிகர்கள் திரண்டனர். வாரிசு திரைப்பட போஸ்டருடன் வந்தவர்கள் மயூரநாதர், அபயாம்பிகை அம்பாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் ஆலய வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும், படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.