பிரின்ஸ் திரைப்படம் பிரபல OTT-யில் ரிலீஸ்... எப்போ தெரியுமா ?

 
1

தமிழகத்தை தாண்டி தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ப்ரின்ஸ்'. முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில் வாத்தியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாகவும், நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

1

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

ப்ரின்ஸ் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது 

From Around the web