லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாவதால் சிக்கல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி !

நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் 'கோல்டு'. இந்த படத்தை 'பிரேமம்' படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளைக் கொண்ட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் மலையாளத்தின் முன்னணி நடிகர் பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திட்டமிட்டபடி தயாரிப்பு பணிகள் நிறைவடையாததால் இப்படத்தின் வெளியீட்டை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவில், எங்களின் தயாரிப்பு தாமதமாவதால் 'கோல்டு' ஓணம் பண்டிகை முடிந்து ஒரு வாரம் கழித்து வெளியிடவுள்ளோம். தாமதத்திற்கு எங்களை மன்னிக்கவும். படம் வெளியான பிறகு இந்த தாமதம் எங்களின் பணியின் மூலம் தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Due to work delay on our side “Gold” will be releasing one week after Onam. Please forgive us for the delay caused. Hoping to compensate this delay through our work when “Gold” releases.
— Alphonse Puthren (@puthrenalphonse) September 1, 2022
- Alphonse Puthren