பிரபல சின்னத்திரை நடிகையை மணந்த தயாரிப்பாளர்..!!

தயாரிப்பாளர் ரவீந்தர் தமிழ் மொழியில் ‘நட்புன்னா என்ன தெரியுமா?’ ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் விமர்சகராக பெரும்பாலானவர்களால் அடையாளம் காணப்பட்டவர். அதிலும் குறிப்பாக நடிகை வனிதா பங்கேற்ற பிக்பாஸ் சீசன்4 தான் இவரை டிரெண்டிங் ஆக்கியது என்றே சொல்ல வேண்டும்.
வனிதா- பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது, நிர்கதியாக விடப்பட்ட பீட்டர் பவுலின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரவீந்திரன் உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளை செய்தார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தராக வலம் வரும் ரவீந்திரன் அண்மையில் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாக இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.
நடிகை மகாலட்சுமியை அனைவரும் அறிவார்கள்.முதன் முதலாக சன்மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய அவர், சில நாட்களில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் சீரியல்களில் முக்கிய வேடங்களிலும், பின்னர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தற்போதும் பல சீரியல்களில் இவர் முகம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு மகாலட்சுமி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையில் தேவதையை கண்டேன் என்ற சின்னத்திரை தொடரில் வில்லியாக மகாலட்சுமி நடித்த போது நடிகர் ஈஸ்வருடன் நட்பு ஏற்பட்டது. ஈஸ்வரின் மனைவியும் மற்றொரு நடிகையுமான ஜெயஸ்ரீ இவர்களின் நட்பை கள்ளத்தொடர்பு என்று குற்றம்சாட்டி பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியதுடன் தற்கொலைக்கும் முயன்றார். இதைத்தொடர்ந்து ஜெயஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மகாலட்சுமி தற்போது தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து ரவீந்திரன் தனது பேஸ்புக் பதிவில், ‘‘மகாலட்சுமியின் மணக்கோலத்தில இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து, ‘‘மகாலட்சுமி மாதிரி ஒரு பெண் கிடைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையில் கிடைச்சா என்று கூறியதுடன் Comingsoon live at FAT MAn FACTS Kutty story with my Pondatiiiii என்று பதிவிடுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த திடீர் திருமணம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.