புஷ்பா படக்குழுவினர் தற்போது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில்..!! ஏன் தெரியுமா ? 

 
1

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் இந்திய சினிமாவையே புரட்டிப்போட்ட திரைப்படம் ‘புஷ்பா’. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வெளியானது. முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் வாரி குவித்தது. 

pushpa

இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கியது. இதையடுத்து கடந்த மாதம் இரண்டாம் பாகத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. 

pushpa

இந்நிலையில் இப்படம் வரும் 8-ஆம் தேதி ரஷ்யாவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா, இயக்குனர் சுகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளனர். அங்கு படக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த படத்தின் ஸ்பெஷல் காட்சிகள் இன்று டிசம்பர் 1-ஆம் தேதி மாஸ்கோவிலும், 3-ஆம் தேதி பீட்டர்பெர்க் நகரில் வெளியிடப்படுகிறது. அதேநேரம் அந்த தேதிகளில் படக்குழுவினர் ப்ரோமோஷனில் ஈடுபட உள்ளனர். 

ரஷியன் மொழியில் வெளியான புஷ்பா படத்தின் ட்ரைலர் இதோ 

From Around the web