ஆஸ்கர் விருதுகளின் இந்த பிரிவில் இறுதி சுற்றிருக்கு தகுதி பெற்ற ஆர். ஆர். ஆர்..!! 

 
1

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95 ஆவது ஆஸ்கர் விருது விழா நடைபெறவுள்ளது.  இதற்காக உலகம் முழுவதில் இருந்து பல மொழி திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

ஆந்த வகையில் இந்தியாவில் இருந்து ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொப்பாளர், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அமைப்பாளர், சிறந்த காட்சி அமைப்பு ஆகிய பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது.

photo

இந்த நிலையில் தற்பொழுது ஆஸ்கர் விருதுகளின் ஒரிஜினல் பாடல் பிரிவில் இறுதி சுற்றிருக்கு தகுதி பெற்ற 15 பாடல்களில் ஆர். ஆர். ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் இடம் பெற்றுள்ளது. இதன் இறுதி பட்டியல் அடுத்த மாதம் 24 ஆம்தேதி வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து எந்த பாடல் வெற்று பெறும் என்பதை மார்ச் 15ஆம் தேதி தெரியவரும்.

From Around the web