வெள்ளித்திரைக்கு போகும் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகர்.. அப்போ சீரியல் ?

 
1

விஜய் டிவியில் ஒளிப்பரப்பன ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை பக்கம் வந்தவர் நடிகர் சித்து. 

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்த இவர், வல்லினம்,  உனக்கென்ன வேணும் சொல்லு, குற்றம் கடிதல், பீச்சாங்கை, ஒதைக்கு ஒதை, கமரக்கட்டு, மதுரை வீரன், அகோரி ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். இதையடுத்து போதிய வாய்ப்பு இல்லாததால் ‘திருமணம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். முதல் சீரியலில் ரசிகர்களை கவர்ந்த சித்து, தற்போது ‘ராஜா ராணி 2’-ல் ஹீரோவாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வரும் சித்து, புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைத்திருப்பதால்,சித்து சீரியலை விட்டு விலகுகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 

From Around the web