படையப்பா படத்திற்கு பின் சூப்பர்ஸ்டார்க்கு வில்லியாகும் ராஜமாதா..?

 
1

ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கி உள்ளார். விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த பீஸ்ட் படத்தையும் இயக்கி உள்ளார். தற்போது ரஜினியுடன் இணைந்துள்ளார். இது ரஜினிக்கு 169-வது படம்.

இதில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசி வருவதாகவும், இன்னொரு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை ஓரிரு மாதங்களில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனையும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் 1999-ல் வெளியாகி வெற்றி பெற்ற படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவரது நீலாம்பரி வில்லி கதாபாத்திரம் பேசப்பட்டது. தற்போது ரஜினியின் 169-வது படத்திலும் ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web