எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘கொடுத்து வைத்தவள்’படத்தை  தயாரித்த பழம் பெரும் தயாரிப்பாளர் ராஜன் காலமானார்..!!

 
1

1963-ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘கொடுத்து வைத்தவள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஈ.வி.ராஜன். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடித்த ‘குமரிப் பெண்’, சிவாஜி நடித்த ‘தங்கச்சுரங்கம்’, ரஜினி நடித்த ‘குப்பத்து ராஜா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். 

EVRajan

இவர் ஈவிஆர் பிக்சர்ஸ் சார்ப்பில் 15 படங்களை தயாரித்து உள்ளர். தமிழ் மட்டுமின்றி ‘ஆன்க் மிச்சோலி’ மற்றும் லகான் ஆகிய இரண்டு இந்திப் படங்களையும் ராஜன் தயாரித்துள்ளார்.

இவர் கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலமானார். இவர், நடிகை ஈ.வி.சரோஜாவின் சகோதரர் மட்டுமின்றி, பிரபல இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் மைத்துனரும் ஆவார்.

RIP

இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணியளவில் கொட்டிவாக்கத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு தயாரிப்பாளர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From Around the web