செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட ராணா டகுபதி... ரசிகர்கள் அதிர்ச்சி..!!  

 
1

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘லீடர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராணா. அதன்பிறகு ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதையடுத்து கடைசியாக அவர் நடித்த ‘விராட பருவரும்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிசி நடிகராக இருக்கும் ராணாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் நடிகர் ராணா திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார். கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், வெளியே வந்துக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் தனது செல்போனை ராணாவிற்கு முன்பு நீட்டி ஒரேயொரு செல்பி எடுத்துக் கொள்வதாக தாழ்மையுடன் கேட்டார். 

ஆனால் அந்த நேரத்தில் கோபமடைந்த ராணா, செல்போனை பிடுங்கிக் கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் அந்த ரசிகர் ராணாவின் பின்னாடியே சென்றார். அதன்பிறகு புன்முறுவலுடன் அந்த செல்போனை ரசிகரிடம் ராணா கொடுத்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பானது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 


 

From Around the web