ரஞ்சிதமே ரஞ்சிதமே மனசை கலைக்கும் மந்திரமே - விஜய் குரலில் வெளியான ‘வாரிசு’ பாடல் ப்ரோமோ..!!

 
1

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக எக்ஸ்பிரஸ் குயின் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படம் ஆக்ஷன், எமோஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து கட்டிய ஒரு மசாலா படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலின் புரோமோ இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் குரலில் “ரஞ்சிதமே” என்ற இந்த புரோமோ வெளியாகி அரைமணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

From Around the web