புதிய சாதனை படைத்த வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல்..!
Sat, 21 Jan 2023

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் வாரிசு. சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும், குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
5 நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்த இப்படக் கடந்த 7 நாட்களில் ரூ. 210 கோடி வசூல் செய்துவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், தற்போது இந்த படம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த ரஞ்சிதமே பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சிறப்பான தரமான சம்பவம் செய்துள்ளது .